Saturday, 13 December 2014

இறைவணக்கம்

குழந்தைகளின்
இறைவணக்கத்தை
தினமும் கேட்கவரும்
கடவுளுக்கு
விடுமுறைநாள் என்றாலே
பிடிக்கவில்லையாம்

Thursday, 4 December 2014

பிச்சைக்காரன்

தெருவோரம் பார்த்த
அவனைக் கண்டு வருத்தப்பட்டு
என்னுடைய வருத்தங்களில்
மேலும் ஒன்றைக்
கூட்டிக்கொண்டேன்
ஆனால் எந்தவித வருத்தமும்
இல்லாமல் அவன்!

Tuesday, 2 December 2014

கருவின் பயணம்

மாற்றங்களை நோக்கிய
எனது பயணத்தில்
ஒரு வழிப்பாதையில்
எதிர்நோக்கி பயணிப்பவன்
போலவே உணர்கிறேன்

எனது தவறுகளை
நான் உணரும்போதெல்லாம்
குறைபிரசவத்தில் பிறக்கும்
உணர்வே மிஞ்சுகிறது

தட்டிக்கேட்கவும் முடியாமல்
ஒத்துப்போகவும் முடியாமல்
பயணிக்கும் பல மனிதர்களைப்போல
உலகில் பிறக்க விருப்பமில்லை

நான் விழிக்கப்போகும்
இந்த கறைபடிந்த உலகில்
பிறக்குமுன் ஒருமுறை
பிறக்க ஆசை தான்!
பிடிக்கவில்லை என்றால்
கருவழித்துக் கொள்ளலாமே

அப்படியே பிறந்தாலும்
என் பிறவிப் பிழைகளைத் திருத்த
நிச்சயம் எனக்கோர்
ஆசிரியன் தேவை
கடவுள் ரூபத்திலோ அல்லது
மனித ரூபத்திலோ

இத்தனையையும் மீறி
என்னை நான்
நல்லவனாகவே இவ்வுலகில்
பிரசவிக்க விரும்புகிறேன்

பிரசவ உந்துதலை
நான் உணரும் சமயத்தில்
எனக்குள்ளே ஒரு நடுக்கம்
எனக்குள் உருவான கரு
மிதவாதியா மதவாதியா
தீவிரவாதியா என்று.

பயணத்தை ஆரம்பித்த
என் தாயான என்னிடமே
நான் கேட்க விரும்புகிறேன்
பனிக்குடத்தின் பரிசுத்தத்திலேயே
என்னை வைத்துக்கொள்வாயா என்று.

ஆம்
மாற்றங்களை நோக்கிய
எனது பயணத்தில்
ஒரு வழிப்பாதையில்
எதிர்நோக்கி பயணிப்பவன்
போலவே உணர்கிறேன்.

Saturday, 24 November 2012

கண்ணீர்


நீ விடை பெறும் போதெல்லாம்
என் கண்களில் நடக்கும்
வரவேற்பு வைபவம்

Friday, 23 March 2012

டாக்டரின் காதல் தோல்வி (ச்சும்மா கற்பனை)-tamil poem,love poem

தவறேதும் செய்யாத
எனக்குள் நுழைந்த
Immuno defeciency virus நீ

எனக்கும் உனக்கும்
ஏற்பட்ட Accident ல்
சேதாரம் என்னவோ
எனக்கு மட்டும் தான்

ECG எடுத்தாலும்
EEG எடுத்தாலும்
பதியப்போவதென்னவோ
உன் நினைவலைகள் மட்டும் தான்

MTP Act டை மீறிவிட்டாய்
12 வாரங்கள் கழிந்த
நம் காதல் கருவை
கலைத்ததினால்

நகமும் சதையுமாய்
இருந்த நமக்கிடையில்
ஏன் இந்த  Paronychium

காயம் ஏற்படுத்தியதும் நீ
கட்டு போட்டதும் நீ!
இபபோது தான் புரிந்தது
நான் ஒரு Guniea pig என்று

விட்டில் பூச்சியாய் சுற்றி வந்தேன்
நீ வெளிச்சம் என்று நம்பி!
தெரியாமல் போய்விட்டது
அது suicide attempt என்று

மகரந்த பூவே!
மதுவை நீ சுமந்தாலும்
Deaddiction ward ல்
இருப்பதென்னவோ நான் தான்

உலகம் சொல்கிறது
எனக்கு Erotomania என்று
நமக்கு தான் தெரியும்
உண்மை என்னவென்று

நீ என்னை விலகினாலும்
உன் குரலோடும், பிம்பங்களோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Hallucinatory உலகில்
 

Thursday, 9 February 2012

பிரிவின் வலி -GRIEF (Tamil poem)

விதையின் மரணத்தில் தான்
விருட்சங்கள் வளரும்

விறகின் மரணத்தில் தான்
வெளிச்சம் தோன்றும்

காதலின் மரணத்தில் தான்
காவியங்கள் பிறக்கும்

விரோதத்தின் மரணத்தில் தான்
மனிதத்துவம் மலரும்

ஆனால் மனிதா
உன் மரணத்தின் முடிவு?

உன் ப்ரியமானவர்களின்
அழுகுரல்கள் சொல்கின்றன
நேசம்.........
மரணத்தை விட
கொடிய வலியுடையது
என்பதை

Wednesday, 8 February 2012

என்னவளே-5 (tamil poem,love poem)

நீ இரவில்
வீதிஉலா வரும்நேரத்தை
அரசுக்கு அறிவித்து விடு!
அந்த நேரத்தில் எல்லாம்
மின் தடையை அமல்படுத்தட்டும்